Home இலங்கை குற்றம் ஐஸ் போதைப்பொருளுடன் புத்தளத்தில் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் புத்தளத்தில் ஒருவர் கைது

0

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலவியா பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன்
ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புத்தளம் முகாமின் அதிகாரிகள் குழுவொன்று
மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான குறித்த சந்தேகநபர் பலவியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்

இதனையடுத்து, இவர் மேலதிக விசாரணைகளுக்காகப் புத்தளம் பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version