Home இலங்கை குற்றம் முல்லைத்தீவில் 6 கட்டுக்குழல் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவில் 6 கட்டுக்குழல் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

0

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளங்கோபுரம் பகுதியில்
சட்டவிரோத கட்டுத்துவக்கு துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த கைது நடவடிக்கை நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றில் முன்னிலை 

இளங்கோபுரம் – தேராவில் விசுவமடு முகவரியைகொண்ட 25 அகவையடைய ஒருவர் அவரது
வீட்டில் கட்டுக்குழல் துப்பாக்கிகள் 6 வைத்திருந்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version