Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தி அழிக்க நினைப்பது பகல் கனவே.. சி.வீ.கே திட்டவட்டம்

தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தி அழிக்க நினைப்பது பகல் கனவே.. சி.வீ.கே திட்டவட்டம்

0

எங்கள் கட்சி கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி.
சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தி
அழித்து விடலாம் என்பது பகல் கனவே என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்
சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை
குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13ஆம் திருத்தத்தையும் அரசியலமைப்பையும் குழப்பி
ஏக்ய ராஜ்ய மற்றும் ஒற்றையாட்சி என இரண்டையும் கூறுகிறார்.

அது 38 வருடமாக
தோல்வியடைந்த முறை
என சொல்கிறார்.

மாகாண சபை சட்டத்தின் மூலம் தான்
தற்போது உள்ள உள்ளூராட்சி சபைகள் முறைமை காணப்படுகின்றது.

13ஆம் திருத்தம் 

நடைபெற்று முடிந்த
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கஜேந்திரகுமாரின் கட்சியும் போட்டது. அது
ஒற்றையாட்சி இல்லை என சொல்கிறாரா என விளங்கவில்லை.

கஜேந்திரகுமார் முடக்கம் முடக்கம் என சொல்கிறார். ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதி முடக்க கூடாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கூறுகிறார்.

எங்களைப் பொறுத்தவரையில் 87க்கு முன்னர் நாடாளுமன்ற கட்டமைப்புக்கு பிறகு
உள்ளூராட்சி சபை முறைமை தான் காணப்பட்டது.
1988க்கு பின்னர் 13ம் திருத்த சட்ட மூலம் ஒரு கட்டமைப்பாக மாகாண சபை
கொண்டுவரப்பட்டது.

பாராளுமன்றுக்கு அடுத்ததாக உப சட்டவாக்க அலுவலகமாக அது காணப்பட்டது.

13ஆம் திருத்தமும் மாகாண சபையும் எமது அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு அல்ல.
எமது கட்சியின் நிலைப்பாடும் அதுவே.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை உள்ளக விசாரணையை
வலியுறுத்துவது எமக்கு ஏமாற்றமளிக்கிறது என கடிதத்தில் சொல்லியிருக்கிறோம்.
இந்த கடிதம் நானும் சுமந்திரனும் மட்டும் கையொப்பம் வைத்து அனுப்பிய கடிதம்
அல்ல” என குறிப்பிட்டார். 

NO COMMENTS

Exit mobile version