Home இலங்கை குற்றம் யாழில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

யாழில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

0

வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டுவந்த இலங்கையர் ஒருவர் நேற்றையதினம்(13) காங்கேசன்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து 700 சிகரெட்டுகளை கப்பல் மூலம்
எடுத்து வந்துள்ளார்.

நீதிமன்றத்தில் முற்படுத்த

அவர் சுங்கத்துறை அதிகாரிகளது சோதனை முடிவடைந்த பின்னர்
வெளியே வந்தவேளை யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இவ்வாறு
சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/one-arrested-with-foreign-cigarettes-in-jaffna-1752463653

NO COMMENTS

Exit mobile version