புதுக்குடியிருப்பு- ஆனந்தபுரம் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த
கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை
இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 20 லீற்றர் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றையதினம்
(27) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது மார்ச்
மாதம் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
