Home இலங்கை குற்றம் உயிர் கடலாமை மற்றும் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது

உயிர் கடலாமை மற்றும் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது

0

குருநகர் இறால் வளர்ப்புதிட்டம் பகுதியில் 30 கிலோ எடையுடைய உயிர் கடல் ஆமை
மற்றும் 20 கிலோ எடையுடைய கடலாமை இறைச்சியுடனும் 57 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(18.02.2025) இடம்பெற்றுள்ளது.

யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு
பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் போதைப்பொருள்
தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை

சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Source: https://tamilwin.com/article/one-arrested-with-live-turtle-and-turtle-meat-1739922408

NO COMMENTS

Exit mobile version