வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் பாேதைப்பாெருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,
முல்லேரியா, பரோன் ஜெயதிலக மாவத்தையில் வெபாடாவில் வசிக்கும் 43 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி, 9 தோட்டாக்கள், ஒரு மகசின் மற்றும் சுமார் 13 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
