Home இலங்கை சமூகம் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, சுன்னாகம் சந்தைப் பகுதியில் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இரு தரப்பினருக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினையே இந்த வாள் வெட்டு தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸார் விசாரணை 

மேலும், வாள்வெட்டுக்கு இலக்கான நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிய வராதுள்ள நிலையில் தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/one-i-njured-in-sword-cut-attack-in-jaffna-1729437723

NO COMMENTS

Exit mobile version