Home இலங்கை சமூகம் நாட்டில் உரிமத் தகடுகள் இல்லாம் ஒரு லட்சம் வாகனங்கள்

நாட்டில் உரிமத் தகடுகள் இல்லாம் ஒரு லட்சம் வாகனங்கள்

0

கடந்த 8 மாதங்களில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 586 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 745 மோட்டார் சைக்கிள்களாகும். எனினும், வாகன எண் தகடுகள் அச்சிடுதல் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதால், இந்தப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எண் தகடுகள் கிடைக்கவில்லை.

எண் தகடுகள் அச்சிடும் பணி, விலை மனு கோரல் செயல்முறை மூலம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணை்ணகளம் தெரிவித்துள்ளது.

வாகன எண் தகடு

எனினும், எண் தகடுகள் அச்சிடுதல் நிறுத்தப்பட்டதால், வாகன எண் தகடுகளை தயாரிக்கும் வணிகங்களின் கட்டணங்களும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version