Home முக்கியச் செய்திகள் பதுளையில் வீட்டின் சுவர் கட்டியவர்களுக்கு நேர்ந்த துயரம்

பதுளையில் வீட்டின் சுவர் கட்டியவர்களுக்கு நேர்ந்த துயரம்

0

 பதுளை, ஹிந்தகொட களு டேங்க் வீதியில் ஒரு வீட்டின் பக்கவாட்டுச் சுவர் கட்டிக்கொண்டிருந்த இருவர் மண் குவியலுக்கு அடியில் புதைந்தனர். இந்த சம்பவம், நேற்று (20 ஆம் திகதி) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில்  ஹாலி எல, அந்துடவாவல பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஹேரத் முதியன்செலகே சந்திர பால பண்டார உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை 

இருவரும் ஒப்பந்ததாரர் ஒருவரின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பதுளை போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் மருத்துவக் குழுவும், சுவ செரிய அம்புலன்ஸ் சேவையின் சுகாதார ஊழியர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று மண்ணுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு அடிப்படை முதலுதவி அளித்து பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.

இந்த முயற்சிகளுக்கு இராணுவம், காவல்துறை, பதுளை நகராட்சி மன்ற தீயணைப்புத் துறை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் உதவினர். 

NO COMMENTS

Exit mobile version