Home உலகம் ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடத்தில் வெடித்தது எரிவாயு : ஒருவர் பலி : ஏழு பேர் காயம்

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடத்தில் வெடித்தது எரிவாயு : ஒருவர் பலி : ஏழு பேர் காயம்

0

ரஷ்யாவில் (Russia) அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் திடீர் எரிவாயு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவமானது மத்திய ரஷ்யாவின் ஸ்டெர்லிடாமக் நகரில் உள்ள பாஷ்கார்டோஸ்தான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது,  ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்  7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு வெடிப்பு

இந்த சம்பவம் குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ”வீட்டு எரிவாயுவை கையாள்வதில் கவனக்குறைவாக மக்கள் உள்ளனர்.  எரிவாயு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடாத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர். 

ரஷ்யாவில் எரிவாயு வெடிப்புகள் பொதுவானவை என்று கூறப்படுகிறது. மேலும் சோவியத் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இதில் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Source: https://ibctamil.com/article/one-person-died-in-gas-explosion-russia-7-injured-1719930586

NO COMMENTS

Exit mobile version