Home இலங்கை சமூகம் ஆலய கேணியை துப்புரவு செய்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

ஆலய கேணியை துப்புரவு செய்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

0

வவுனியா(vavuniya) குடியிருப்பில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் த.காந்தரூபன் (வயது 49) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

ஆலய கேணியை துப்புரவு செய்தவேளை சம்பவம்

வவுனியா குடியிருப்பு விநாயகர் ஆலயத்தின் தீர்த்தக்கேணியினை மின்சாரத்தில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்களின் மூலம் நீரினை அகற்றி துப்புரவு செய்யும் போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

   

NO COMMENTS

Exit mobile version