போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி விரைவில் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (18.11.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி, டிசம்பர் 31ஆம் திகதிக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்கால திட்டங்கள்
அத்துடன், அடுத்த ஆண்டு நடுப்பகுதியில், இந்த அமைப்பை ‘GovPay’ மூலம் ஓட்டுநர் குறைபாடு திட்டத்துடன் இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாகன சாரதிகளுக்கு விரிவான குறைபாடு அமைப்பை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
