Home இலங்கை சமூகம் இலங்கையில் புதிய கோவிட் பரவியதா..! பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

இலங்கையில் புதிய கோவிட் பரவியதா..! பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

0

இலங்கையில்(sri lanka) தற்போது புதிய COVID-19 மாறுபாடு பரவும் அபாயம் இல்லை, எனவே தேவையற்ற அச்சத்தை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, தொற்றுநோயியல் பிரிவின் தரவுகளின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 கடந்த சில வாரங்களாக,ஆசிய நாடுகள் பலவற்றில் COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

தேவையான ஆய்வக கண்காணிப்பு 

மேலும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் தயார்படுத்தவும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் சுகாதார அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அமைச்சின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சாத்தியமான தொற்றுநோய் சூழ்நிலைகளை முன்கூட்டியே அடையாளம் காண தேவையான ஆய்வக கண்காணிப்பு அமைப்பும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமான தகவல்களுக்கே கவனம் செலுத்துங்கள்

 சுகாதார அதிகாரிகள் காலப்போக்கில் COVID-19 சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து வரும் அதே வேளையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர்,அதிகாரபூர்வமாக வழங்கும் தகவல்களுக்கு மட்டுமே பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version