Home இலங்கை சமூகம் 79 அபிவிருத்தித் திட்டங்களில் ஐந்து மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்

79 அபிவிருத்தித் திட்டங்களில் ஐந்து மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்

0

2025 மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்படவிருந்த 79 பாரிய அளவிலான
அபிவிருத்தித் திட்டங்களில் ஐந்து மட்டுமே திட்டமிட்டபடி முடிந்துள்ளதாக
திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் துறையின் அறிக்கை கூறியுள்ளது.

பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்கள் முதல் காலாண்டு 2025 என்ற தலைப்பில்
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில்
இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் 205 திட்டங்களின் நிலையை குறித்த அறிக்கை
ஆராய்ந்துள்ளது.அவற்றில் 2025 இல் ஆரம்பிக்கப்பட்ட 21 புதிய திட்டங்கள் உள்ளன
அதில் ஆறு வெளிநாட்டு மானியங்கள் மூலலும் ஐந்து வெளிநாட்டு கடன்கள் மூலமும்
மற்றும் 10 உள்ளூர் நிதியைப் பயன்படுத்தியும் மேற்கொள்ளப்படுகின்றன.

வெளிநாட்டு கடன்

இதனடிப்படையில் முன்னைய ஆண்டுகளைப் போலவே, இந்த அறிக்கை இலங்கையில் திட்ட
செயல்படுத்தலின் இருண்ட காலத்தை சித்தரிக்கிறது.

வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட திட்டங்கள் உள்நாட்டில் நிதியளிக்கப்பட்டவற்றுடன்
ஒப்பிடும்போது அதிக தாமதங்களை சந்தித்தன.

திட்ட நோக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கால நீடிப்புகளை வழங்குவதே
இந்த திட்ட வீழ்ச்சிக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக, வெளிநாட்டு கடன் ஆதரவு திட்டங்கள் முதல் காலாண்டின் இறுதியில் 26.53
சதவீத நிதி முன்னேற்றத்தைக் காட்டின. ஆனால் உள்நாட்டு நிதிகளால் ஆதரிக்கப்படும் திட்டங்கள் 71.93 சதவீத நிதி
முன்னேற்றத்தை அடைந்தன.

NO COMMENTS

Exit mobile version