Home இலங்கை சமூகம் கொழும்பில் மூடப்பட்டிருந்த முக்கிய வீதிகளை திறக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

கொழும்பில் மூடப்பட்டிருந்த முக்கிய வீதிகளை திறக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

0

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரண்டு வீதிகளை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்டிருந்த வீதிகளான சர் பரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை ஆகிய வீதிகளே இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஜனாதிபதியினால் இன்று (27.09.2024) பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உத்தரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) உத்தரவுக்கமைய இந்த வீதி திறக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வீதியை பொதுமக்கள் இன்று  முதல் உபயோகிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/lC7Kskeqg0Y

NO COMMENTS

Exit mobile version