Home இலங்கை கல்வி ரொமேனியாவில் பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

ரொமேனியாவில் பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

0

அனுமதி பெறுவதற்கான விதிகளை மாற்றியுள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த
வாடகைக்கார் ஓட்டுநர்களை ரொமேனியா தொழில் செய்ய அனுமதிக்கவிருக்கிறது.

ரொமேனிய ஊடகங்களின்படி, ஆங்கிலத்தில் தேர்வை எழுத அனுமதிப்பதன் மூலம் அனுமதி
பெறுவதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

அரசு அனுமதி

இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை
வாடகைக்கார் அல்லது உபர் போல்ட் ஓட்டுநர்களாக தொழில் செய்ய ரொமேனியா
அனுமதிக்கும் என்று ரொமேனிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தொழில்முறை ஓட்டுநர்கள் இல்லாத நிலையில், ரொமேனியாவில் உள்ள போக்குவரத்து
அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக, பொருளாதாரம் மிகவும் வளர்ச்சியடையாத நேபாளம்,
இலங்கை, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்தும்,
ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் ஆங்கிலம் பேசப்படும் நாடுகளிலிருந்தும் தொழில்முறை
ஓட்டுநர்களை அரசு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version