சோதனையின்றி 323 கொள்கலன்களை விடுவித்தமை தொடர்பில் விசாரணைக்காக நாடாளுமன்ற
தெரிவுக்குழு அவசியம் என எதிர்க்கட்சி கோரியுள்ளது.
இது குறித்து ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிப்பதற்காக ஒரு
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கக்கோரும் யோசனை நாடாளுமன்றில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையை எதிர்க்கட்சியின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக
சமர்ப்பித்துள்ளார்.
தெரிவுக்குழு யோசனை
நடப்பு அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் இந்த கொள்கலன்களை எவ்வித
சோதனைகளும் இன்றி வெளியில் எடுத்துச்செல்ல அனுமதித்ததாக முன்னதாக
குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
எனினும், அரசாங்கம் இன்னும் உரிய பதிலை வழங்காதுள்ள நிலையிலேயே, தெரிவுக்குழு
யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
