மன்னார்தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கணிய மணல் அகழ்வு
குறித்து மன்னார் பிரஜைகள் குழு மற்றும் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆகியோரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம்
அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன்,காதர் மஸ்தான்,
து.ரவிகரன், பா. சத்தியலிங்கம்.,மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி
திலகநாதன், முத்து முஹமட்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை
குறித்த கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாட பட வேண்டிய பல்வேறு
விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக
கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக 2ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடை
நிறுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
