Home இலங்கை கல்வி சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபால் திணைக்களத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனுமதி அட்டைகள்

இதன்படி, பாடசாலை மாணவர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கும், தனியார் பரீட்சார்த்திகளின் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பினால் www.doenets.lk ஊடாக 2025 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் அதனை செய்ய வேண்டும் என அமித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

மேலும், அனைத்து பாடசாலை அதிபர்களிடமும் அனுமதி அட்டைகளை மாணவர்களுக்கு விரைவாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, தனியார் பரீட்சார்த்திகள் இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்திடம் நேரடியாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


NO COMMENTS

Exit mobile version