Home இலங்கை குற்றம் விசேட சோதனையில் சிக்கிய 2000இற்கு மேற்பட்ட ஆயுதங்கள்

விசேட சோதனையில் சிக்கிய 2000இற்கு மேற்பட்ட ஆயுதங்கள்

0

இந்த வருடத்தில் இதுவரை 2,097 ஆயுதங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 23ஆம்
திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட
விசேட சோதனையில் 2 ஆயிரத்து 97 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்படி, ரி – 56 ரக துப்பாக்கிகள் 67, கைத்துப்பாக்கிகள் 73, ரிவால்வர் ரக
துப்பாக்கிகள் 50 மற்றும் 1,907 ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று
பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version