Home இலங்கை சமூகம் தொடரும் சீரற்ற காலநிலை வடக்கு கிழக்கு உட்பட 17 மாவட்டங்களில் இரண்டு இலட்சம் பேர் பாதிப்பு

தொடரும் சீரற்ற காலநிலை வடக்கு கிழக்கு உட்பட 17 மாவட்டங்களில் இரண்டு இலட்சம் பேர் பாதிப்பு

0

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் 59,269 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்(Disaster Management Centre )(DMC)தெரிவித்துள்ளது.இதிலும் வடக்கு ,கிழக்கில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி மத்திய மாகாணத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வடமேல் மாகாணத்தில் 1,893 குடும்பங்களைச் சேர்ந்த 6,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் 

வட மாகாணத்தில் 17,922 குடும்பங்களைச் சேர்ந்த 62,505 பேர் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 36,811 குடும்பங்களைச் சேர்ந்த 129,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மத்திய மாகாணத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஊவா மாகாணத்தில் 477 குடும்பங்களைச் சேர்ந்த 1,861 பேரும், வடமத்திய மாகாணத்தில் 1,730 குடும்பங்களைச் சேர்ந்த 5,451 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழையால் கணிசமான சேதம் 

கனமழையால் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது, ஆறு வீடுகள் முழுமையாகவும், 561 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 3,102 குடும்பங்களைச் சேர்ந்த 10,137 பேர் 101 பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/over-200000-people-affected-across-17-districts-1732701231

NO COMMENTS

Exit mobile version