Home இலங்கை சமூகம் நாட்டை விட்டு வெளியேறும் 5000 வைத்தியர்கள் : வெளியான தகவல்

நாட்டை விட்டு வெளியேறும் 5000 வைத்தியர்கள் : வெளியான தகவல்

0

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறிவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் வெளிநாடுகளில் வைத்தியத்துறைக்கு தகுதி பெற்று வெளிநாடு செல்லுவதற்கு வைத்தியர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இணை சுகாதார பட்டதாரிகள்

வைத்தியர்கள் நாட்டில் தங்கியிருந்து பணியாற்றக்கூடிய ஒரு சூழல் இன்று இல்லை எனத் தெரிவித்த அவர்,

வைத்தியர்களுக்கு நியமனம் வழங்குவதைப் போல வைத்தியர்களை நாட்டிலேயே பணியாற்றக்கூடிய ஒரு சூழலையும் ஏற்படுத்திக் கொடுங்கள் என கேட்டுக் கொண்டார்.

மேலும் தாதியர் சேவையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் கடுமையான சிக்கல்கள் காணப்படுகின்றதாகவும் தெரிவித்தார்.

இணை சுகாதார பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதால், இவர்களுக்கு வேலை வழங்கி புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் ஆயுர்வேத பட்டதாரிகள் பிரச்சினை குறித்து கவனம் செலுத்திய அவர், ஏறக்குறைய 1800 ஆயுர்வேத பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version