Home உலகம் உலகின் மிகப்பெரிய கார் சேகரிப்பின் உரிமையாளர் யார் தெரியுமா..!

உலகின் மிகப்பெரிய கார் சேகரிப்பின் உரிமையாளர் யார் தெரியுமா..!

0

புருனே சுல்தான் ஹசனல் போல்கியா(Brunei Sultan Hassanal Bolkiah) உலகின் மிகப்பெரிய கார் சேகரிப்பின் உரிமையாளர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவரது கார் சேகரிப்பில் சுமார் 7000 சொகுசு கார்கள் இருப்பதாக அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகத்தின் கவனம்

இவரது கார் சேகரிப்பின் மதிப்பு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவரது கார் சேகரிப்பில் பென்ட்லி, ஃபெராரி, போஷ், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஒஸ்டன் மார்டன் கார்கள் அடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புருனே நாட்டுக்கு சென்றார், அதன் மூலம் உலகத்தின் கவனம் புருனே சுல்தான் மீது திரும்பியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version