Home சினிமா 3 நாட்களில் படைத்தலைவன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் படைத்தலைவன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

படைத்தலைவன்

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து மதுர வீரன் என்கிற படத்தில் நடித்தார்.

இதன்பின் கிட்டதட்ட 7 ஆண்டுகள் கழித்து சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் படைத்தலைவன். இப்படத்தை அறிமுக இயக்குநர் அன்பு இயக்கியுள்ளார். கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், யாமினி சந்தர் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும் AI தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த கேப்டன் விஜயகாந்தை இப்படத்தில் நடிக்க வைத்திருந்தனர். கடந்த வாரம் திரைக்கு வந்த படைத்தலைவன் படத்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல் விவரம்

இந்த நிலையில், 3 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் படைத்தலைவன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படைத்தலைவன் படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 1.4 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/padai-thalaivan-movie-3-days-box-office-1750042543

NO COMMENTS

Exit mobile version