Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் நெல்கொள்வனவு தொடர்பில் சோதனை நடவடிக்கை

கிளிநொச்சியில் நெல்கொள்வனவு தொடர்பில் சோதனை நடவடிக்கை

0

கிளிநொச்சியில் (Kilinochchi) நெல்கொள்வனவில் நடைபெறும் மோசடிகள் தொடர்பாக அளவீட்டு அலகுகள்
திணைக்களத்தினால்
சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சோதனை நடவடிக்கையானது இன்று (28) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி- வட்டக்கச்சி சந்தைப்பகுதி மற்றும் பரந்தன், கண்டாவளை போன்ற பகுதிகளில் இந்த சோதனை
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனுமதியற்ற தராசுகள்

இதன்போது, உரிய காலத்தில் முத்திரையிடப்படாத, மற்றும் அரச அனுமதியற்ற தராசுகள்
திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், நெல்கொள்வனவின் போது அரச அனுமதியற்ற தராசைப் பயன்படுத்தி மோசடி செய்தமை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அளவீட்டு அலகுகள் திணைக்கள அதிகாரிகளால் கிளிநொச்சி பொலிஸாரின் உதவியுடன்
அனுமதியற்ற தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு உரிய
நடவடிக்கைகளும் மோசடிக்காரர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version