வவுனியா (Vavuniya) நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல்கொள்வனவு
மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்யப்படும்
என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நெல் சந்தைப்படுத்தல்
சபையினால் இன்றையதினம் (06.02) விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யப்படவில்லை என
விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெற்கொள்வனவு
நெல் கொள்வனவிற்கான நிதி தமக்கு கிடைக்காமையினாலேயே நெற்கொள்வனவினை
முன்னெடுக்கவில்லை என்றும், திங்கள் கிழமைக்கு பின்னரே நெற் கொள்வனவினை
மேற்கொள்ள முடியும் என நெல் சந்தைப்படுத்தும் சபையினர் தமக்கு தெரிவித்ததாக
விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிவப்பு நெல்லுக்கு 120 ரூபாவாகவும், சம்பா நெல்லுக்கு 125 ரூபாவாகவும், கீரிச்சம்பா நெல்லுக்கான விலை 132 ரூபாவாகவும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
