அரசாங்க கையிருப்புகளுக்க நெல் இருப்புகளை கொண்டு வந்து வழங்கும் விவசாயிகளுக்கு உத்தரவாத விலைக்கு கூடுதலாக ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.2 வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை எம்பிலிப்பிட்டிய நெல் சேமிப்பு வளாகத்தின் ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) விடுத்துள்ளார்.
இதன்படி, விவசாயிகள் குறிப்பிட்ட அளவு நெல்லை அரசு கையிருப்புகளை கொண்டு வந்து வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நெல்லுக்கு உத்தரவாத விலை
மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அரிசி பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டள்ளார்.
அத்தோடு, சில மாவட்டங்களில் நெல் கொள்முதல் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதி அமைச்சர், நெல்லுக்கு உத்தரவாத விலையை நிர்ணயிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.