பஹல கடுகன்னாவ கனேதென்ன பகுதியில் நேற்றையதினம்(22) இடம் பெற்ற மண்சரிவு தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் நேற்றையதினம் (22) மண்சரிவு ஏற்பட்டு வர்த்தக நிலையம் ஒன்றின் மீது பாறை வீழ்ந்து பாரிய அனர்த்தமொன்று ஏற்பட்டது.
சிசிடிவி காணொளி
இதனையடுத்து 10 பேர் குறித்த இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், இதன்போது 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
