Home விளையாட்டு எட்டு ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு மூன்றாவது முறையாக விதிக்கப்பட்ட தடை

எட்டு ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு மூன்றாவது முறையாக விதிக்கப்பட்ட தடை

0

பாகிஸ்தான்(pakistan) கால்பந்து கூட்டமைப்பின் (PFF) உறுப்பினர் பதவியை சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (FIFA) தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு சர்வதேச கால்பந்து தடையை ஃபிஃபா விதிப்பது இது மூன்றாவது முறையாகும்.

தடைக்கான முக்கிய காரணம்

சர்வதேச கால்பந்து அளவுகோல்களின்படி பாகிஸ்தானின் கால்பந்து அரசியலமைப்பை திருத்தத் தவறியது இந்தத் தடை விதிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

ஜூன் 2019 முதல், பாகிஸ்தான் கால்பந்து ஃபிஃபாவால் நியமிக்கப்பட்ட இயல்பாக்கக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

இருப்பினும், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு அவர்களின் பரிந்துரைகளின்படி செயல்படத் தவறிவிட்டது.

அதன்படி, ஃபிஃபாவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் வரை பாகிஸ்தானில் இந்தத் தடை நடைமுறையில் இருக்கும்.

NO COMMENTS

Exit mobile version