Home முக்கியச் செய்திகள் வடக்கு மாகாணத்தில் ஆழ வேரூன்றும் பாகிஸ்தானியர் : இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள கவலை

வடக்கு மாகாணத்தில் ஆழ வேரூன்றும் பாகிஸ்தானியர் : இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள கவலை

0

 இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பாகிஸ்தானியர்களின் நடமாட்டங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை தென்னிந்திய பாதுகாப்பு வட்டாரங்களில்,கவலைகள் மற்றும் கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

  மன்னாரில் அண்மையில் இடைநிறுத்தப்பட்ட காற்றாலைத் திட்டத்திற்காக உள்ளூர் தனியார் நிறுவனம் ஒன்று 28 பாகிஸ்தானியர்களை கொண்டு வந்திருந்துது.இந்த நிலையிலேயே இந்தியாவின் இந்த கரிசனைகள் உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.

 மன்னார் மக்கள் போராட்டம்

 காற்றாலை திட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மன்னார் மக்கள் காற்றாலை அமைக்கப்படுவதால் ஏற்படவுள்ள சுற்றுச்சூழல் கவலைகள் குறித்து போராட்டங்களை நடத்தியதால்,அவர்களின் ஒப்புதல் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகளைத் தீர்க்காமல் மன்னார் தீவில் முன்மொழியப்பட்ட காற்றாலை திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்

 அதேவேளை, குற்றவியல் நடவடிக்கைகள் உட்பட போதைப்பொருள் கடத்தலுக்கு மன்னார் பெரும்பாலும் வழக்கமான வழியாகப் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்பு கவலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக அந்த ஊடபம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version