Courtesy: kabil
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சக்திவாய்ந்த குற்றவியல் கும்பல் உறுப்பினரான பக்கோ சமனின் மனைவி வவுனியா நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளார்.
கடவுச்சீட்டு விசாரணை ஒன்றுக்காக அவர் நேற்று (10.11.2025) நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகம் மூலம் போலி கடவுச்சீட்டை தயாரித்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை பாதுகாப்பு
பலத்த காவல்துறை மற்றும் சிறைச்சாலை பாதுகாப்பின் கீழ் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை எதிவரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
