Home இலங்கை குற்றம் மாயமாகியுள்ள முச்சக்கரவண்டி சாரதியை தேடும் பொலிஸார்

மாயமாகியுள்ள முச்சக்கரவண்டி சாரதியை தேடும் பொலிஸார்

0

மர்மமான முறையில் காணாமல்போயுள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தேடி பாணந்துறை பதுவில பகுதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவருடன் வாடகைக்காக பயணித்த முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான பாணந்துறை சாலிந்து என்பவர் வௌிநாடு சென்றுள்ள நிலையில், அவருக்கு சொந்தமான ஒன்றைத் திருடிய சம்பவம் தொடர்பில் இந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் வந்துரமுல்ல பகுதியை சேர்ந்த மற்றுமொரு நபரையும் கடத்தி சென்று தாக்கிய சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது.

இதன்போது மற்றைய நபர் உயிரிழந்ததுடன், காணாமல்போன முச்சக்கரவண்டி சாரதியே கொலையை நேரில் கண்ட ஒரே சாட்சி என விசாரணையில் தெரியவந்துள்ளது.   

Source: https://tamilwin.com/article/panadura-murter-case-investigation-1726150870

NO COMMENTS

Exit mobile version