விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் தற்போது பாண்டியனின் குடும்பத்தை விட்டு பழனியை பிரிக்க அவரது அண்ணன்கள் திட்டம்போட்டு தனியாக மளிகை கடை வைக்க முடிவு செய்கின்றனர்.
அதற்கு எந்த தடங்கலும் செய்ய வேண்டாம் என பாண்டியனிடம் பழனியின் அம்மா வந்து கேட்கிறார். பாண்டியனும் கோமதியும் பழனியின் புது தொழிலை ஆதரிப்பதாகவே சொல்கின்றனர்.
பிரச்சனை வருமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் பழனி இணக்கமாக இருந்தாலும் தொடங்கப்போகும் புது கடை தான் இனி சீரியலில் புது பிரச்சைகளுக்கு காரணமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழனி தொடங்கும் புது கடைக்காக பாண்டியன் உட்பட எல்லோரும் வாழ்த்து சொல்கின்றனர். இதனால் என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.
