Home முக்கியச் செய்திகள் தென்னகோனின் கீழ் இயங்கிய துணை இராணுவப்படை : நீதிமன்றில் அம்பலமான தகவல்

தென்னகோனின் கீழ் இயங்கிய துணை இராணுவப்படை : நீதிமன்றில் அம்பலமான தகவல்

0

   தனது தனிப்பட்ட மோதல்களைத் தீர்ப்பதற்காக காவல்துறையினரை “துணை ராணுவப் படையாக”முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்(deshabandu tennakoon) பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

தேசபந்து தென்னகோன தனது கைது நடவடிக்கையை நிறுத்தக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை நேற்று(12) விசாரணைக்கு வந்தபோது மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

காவல்துறையினரை பயன்படுத்தி குற்றவியல் வலையமைப்பு 

தேசபந்து தென்னகோன் தனது அதிகாரத்தின் கீழ் உள்ள காவல்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி ஒரு குற்றவியல் வலையமைப்பை இயக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட தகராறுடன் தொடர்பு

​​கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகளைப் பயன்படுத்தி வெலிகமவில் உள்ள ஹோட்டல் மீது தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டார்.

ஒரு காவல்துறை சார்ஜன்ட் மரணத்திற்கு வழிவகுத்த இந்த சம்பவம், தென்னகோனுக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறுடன் தொடர்புடையது என்று பீரிஸ் மேலும் தெரிவித்தார். 

https://www.youtube.com/embed/HWQQCOmp0s4

NO COMMENTS

Exit mobile version