Home இலங்கை குற்றம் கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொதி

கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொதி

0

கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் 19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் சுங்க திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள கூரியர் நிறுவனம் ஒன்றிலிருந்து இந்த போதைப்பொருள் தொகுதி இன்று மீட்கப்பட்டதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கூரியர் நிறுவனத்தில் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 6 பொதிகளை, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

போதைப்பொருள்

அதில், 2 கிலோ 30 கிராம் கொக்கெய்ன் மற்றும் 2 கிலோ 177 கிராம் குஷ் போதைப்பொருள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த பொதிகள் கொழும்பு மற்றும் கடவத்தையில் வசிப்பவர்களின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. எனினும் விசாரணையின் மூலம் அவை போலியான முகவரி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகுதி, மேலதிக விசாரணைகளுக்காக , இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version