Home இலங்கை சமூகம் வவுனியா வடக்கில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர்கள் போராட்டம் !

வவுனியா வடக்கில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர்கள் போராட்டம் !

0

வவுனியா வடக்கு, கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக
ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கூறி
பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்றையதினம்(18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பற்றாக்குறை தொடர்பாக பலமுறை வலயக்கல்வி பணிமனை மற்றும் மாகாணக் கல்வி
அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வினையும் பெற்று
‘தரவில்லை எனவும் பெற்றோர் சுட்டிக்காட்டினர்.

போராட்டம்

இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டம் தொடர்பாக வவுனியா வடக்கு வலயக் கல்விப்பணிப்பாளரிடம் தொடர்பு
கொண்டு கேட்ட பொழுது விரைவில் இந்த பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையை
நிவர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version