பிள்ளைகள் பட்டாசு கொளுத்தும் போது விசேட அவதானம் செலுத்துமாறு பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
பட்டாசு தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கள் ஏற்படக் கூடும்
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தும் பெற்றோரினால் விபத்துக்கள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மது போதையுடன் வாகனம் செலுத்துவதனாலும், வீட்டு வன்முறைகளினாலும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு போதிய அளவு அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் ஆபத்தான இடங்களில் குறிப்பாக நீர் நிலைகளில் பிள்ளைகள் நீந்துவது நீராடுவது தவிர்க்கப்பட வேண்டும் என வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.