Home உலகம் பிரான்சில் மூடப்பட்ட புகழ்பெற்ற அருங்காட்சியகம்

பிரான்சில் மூடப்பட்ட புகழ்பெற்ற அருங்காட்சியகம்

0

பிரான்ஸ் (France) தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் (The Centre Pompidou) என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்காக பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த பாம்பிடோ மையம் உள்ளது.

1977 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

பராமரிப்பு பணி

உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஆண்டுக்கு 32 லட்சம் பொதுமக்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கிறார்கள்.

இந்தநிலையில், பராமரிப்பு பணிக்காக இந்த அருங்காட்சியகம் மூடப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு நடைபெறவுள்ள இந்த பராமரிப்பு பணி முடிக்கப்பட்டு வருகிற 2030 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version