பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகனங்களை நிறுத்தி 10 நிமிடங்கள் ஆனதற்கு பிறகு தான் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது.
இந்த தகவலை கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார வழங்கியுள்ளார்.
அதற்கமைய, பொது வாகன நிறுத்துமிடங்களில் வாகனத்தை நிறுத்தியதும் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதல் 10 நிமிடங்கள்
மேலும், “வாகனம் தரிப்பிடத்தில் இருக்கும் முதல் 10 நிமிடங்களுக்கு கட்டணம் இலவசம்.
வாகனம் நிறுத்தப்படும் நேரத்தை உள்ளிட்டு டிக்கெட் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நபர் ஒருவர் பத்து நிமிடங்களுக்கு மேல் வாகனத்தை நிறுத்தி இருந்தால், அவர்களிடம் 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கு மேல் பணம் பெறுவது சாத்தியமில்லை.
அதேவேளை, விடுமுறை நாட்களிலும் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை” என கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
