Home முக்கியச் செய்திகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்

வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்

0

தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் மிகவும் வேகமாக உயர்வடைந்து வருவதால், இலங்கை நாடாளுமன்ற வளாகமும் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நாடாளுமன்ற வளாகம் நிரம்புவதற்கு தற்போது சுமார் இரண்டு அடி மாத்திரமே மீதமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தின் கீழ் தளத்தில் உள்ள பொருட்களை அறிவுறுத்தலின் பேரில் ஊழியர்கள் மேல் தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகம்

வெள்ளம் ஏற்பட்டால், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள குழு அறைகள் குறிப்பாக கீழ் அறைகள், முதலில் தண்ணீரில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் வெள்ள நீர் நுழைவதைத் தடுக்க மணல் மூட்டைகளை இடவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், தியவன்னா ஓயாவின் நீர்மட்டத்தைக் கண்காணிக்க கடற்படை குழுவும் நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/QRh4hrb6MpU

NO COMMENTS

Exit mobile version