Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்ற சிறப்பு யோசனைக்காக அவசரமாகக் கூடும் நாடாளுமன்றம்

உள்ளூராட்சி மன்ற சிறப்பு யோசனைக்காக அவசரமாகக் கூடும் நாடாளுமன்றம்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் யோசனைக்கு எதிராக
தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் முடிவை
நாடாளுமன்றத்திற்குத் தெரிவிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை,
நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் தலைமையில் இன்று(10) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்
குழுவில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அமர்வு

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் விதிகளின்படி, பிரதமரால்
சபாநாயகரிடம் செய்யப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த யோசனையை பரிசீலிக்க தொடர்புடைய அமைச்சக ஆலோசனைக் குழு
பெப்ரவரி 14ஆம் திகதி கூடும் என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது.

இதற்கிடையில் இந்தத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின்
உத்தரவுக்கு இணங்க, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் தாமதமின்றி நடத்த
வேண்டியதன் அவசியத்தை அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது
வலியுறுத்தியுள்ளார்.

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 

இதற்கிடையில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்
தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் யோசனையின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம்
பெப்ரவரி 17ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 7:00 மணி
வரை நடைபெறும்.

அன்றைய தினத்தில் யோசனை தொடர்பான முன்மொழியப்பட்ட திருத்தங்களை சமர்ப்பிக்க
எதிர்க்கட்சி ஒப்புக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version