Home இலங்கை சமூகம் கூடிய சம்பளத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

கூடிய சம்பளத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

0

இலங்கை மத்திய வங்கியின் ஒப்புதலுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என்ற பெயரில் நிகழ்நிலை மூலம் வேலைவாய்ப்பு மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அது தொடர்பான விளம்பரத்தில், குறித்த வேலையை வீட்டில் இருந்தே செய்யலாம் என்றும் ஒரு நவீன கையடக்க தொலைபேசி அல்லது மடிக்கணினி மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வேலையை வட்ஸ்அப் மூலம் இணைக்க முடியும் என்றும், தினமும் மேற்கொள்ளப்படும் பகுதி நேர வேலையின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.17,500 முதல் 46,000 வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இணைய மோசடி

இந்த நிலையில், இதில் ஈடுபடுபவர்கள் பதிவு செய்ய ஒரு குறிப்பிட்ட கணக்கில் ரூ. 2,000 வைப்பிலிட வேண்டுமென்றும் அதன் பிறகு மோசடியாளர்கள் இணைக்கப்பட்ட தொலைபேசி இணைப்பை துண்டிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால், இந்த இணைய மோசடியில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version