Home இலங்கை குற்றம் பாணந்துறையில் விருந்து வைத்த கணவன் மனைவி உட்பட 10 பேர் கைது

பாணந்துறையில் விருந்து வைத்த கணவன் மனைவி உட்பட 10 பேர் கைது

0

பாணந்துறை, கோரக்கனை பகுதியில் உள்ள வீடு ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்தி விருந்து நடத்தப்பட்ட வீட்டை சோதனை செய்து, வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உட்பட 10 பேரை கைது செய்ததாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை, பொரலஸ்கமுவ, காலி, பசறை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் 

கைது செய்யப்பட்டவர்களில் விருந்துக்கு போதைப்பொருட்களை வழங்கிய நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததாகவும், அவர்களிடம் சிறிய அளவிலான கோக்கெயின் மற்றும் ஐஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலும் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version