Home முக்கியச் செய்திகள் வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலதிபர் கட்டுநாயக்காவில் கைது

வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலதிபர் கட்டுநாயக்காவில் கைது

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கிரீன் சனல்(Green Channel) வழியாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இலங்கை தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.285,000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இலங்கை தொழிலதிபர் ஒருவர் இன்று காலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் திவுலப்பிட்டியைச் சேர்ந்த 58 வயது தொழிலதிபர் ஆவார். அவர் 8D-822 என்ற ஃபிட்ஸ் ஏர் விமானத்தில் அதிகாலை 12.50 மணிக்கு துபாயில் இருந்து விமான நிலையத்திற்கு வருகைத்தந்ததாக கூறப்படுகிறது.

சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

இந்த சோதனைகளின் போது, ​​சுங்க அதிகாரிகளின் அறிவிப்பு இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 19,000 சிகரெட்டுகள் கொண்ட 95 அட்டைப்பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சம்பவம் குறித்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலும் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version