Home இலங்கை சமூகம் தடம் புரண்ட மற்றுமொரு தொடருந்து

தடம் புரண்ட மற்றுமொரு தொடருந்து

0

கொழும்பு (Colombo) – கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான மார்க்கம் மற்றும் கடலோரப் மார்க்கத்தில் செல்லும் தொடருந்துகள் தாமதமாக இயக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடலோரப் பாதை சேவை

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த தொடருந்து தடம் புரண்டுள்ளது.

இதேவேளை களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கிச் செல்லும் தொடருந்து வாதுவ அருகே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலோரப் பாதை சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

NO COMMENTS

Exit mobile version