நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் ஒரு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியான பல்வேறு பொருட்களை கொண்டு வந்த 05 பயணிகளை கட்டுநாயக்க (Katunayake) விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று (28) கைது செய்துள்ளனர்.
இதன் போது, வெளிநாட்டு சிகரெட், விஸ்கி மற்றும் செய்மதி தொலைக்காட்சி ஒலிபரப்பு உபகரணங்களை என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் இரண்டு சீன பிரஜைகள், இரண்டு இலங்கையர்கள் மற்றும் ஒரு இந்திய பிரஜை ஆகியோரால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
விசாரணை
இது தொடர்பான முறையான சுங்க விசாரணையை சுங்க திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பணிப்பாளர்களான ஜே.எம்.எப்.இஃபட் மற்றும் தனுஷ்க பெரேரா ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இந்த பயணிகளுக்கு 03 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளனர்.