Home இலங்கை சமூகம் யாழில் அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம்

யாழில் அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம்

0

செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்பப்பாண மாவட்ட செயலகத்தின் கச்சேரி – நல்லூர் வீதியின் பக்கமாக கடவுச்சீட்டு அலுவலகத்திற்கென பிரத்தியேகமான கட்டிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. 

குறித்த கட்டிடத்தின் நிர்மாண வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

வாக்குறுதியளித்த ஜனாதிபதி

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்று நிறுவப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

இதேவேளை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் யோசனை சமர்ப்பித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த பிரேரணைக்கு கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version