Home இலங்கை சமூகம் இலங்கையில் பாரிய விமான விபத்துக்களை ஏற்படுத்தும் ஆபத்தான சுவர்

இலங்கையில் பாரிய விமான விபத்துக்களை ஏற்படுத்தும் ஆபத்தான சுவர்

0

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள காலி வீதியை அண்மித்து அமைக்கப்பட்டுள்ள கொன்கிரீட் சுவரை அவசரமாக அகற்றுவது குறித்து ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுவர் விமான நடவடிக்கைகளுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் விமானப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என சர்வதேச சமூகத்தால் கடுமையாக விமர்சிக்கப்படும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஜெஜு விமானம்

2024 ஆம் ஆண்டில், தென் கொரியாவில் 175 பேர் உயிரிழந்த ஜெஜு விமானம் இது போன்ற சுவரில் மோதியே விபத்திற்குள்ளானது.

இந்தியாவின் மங்களூர், திருச்சிராப்பள்ளி, லுக்லா மற்றும் நேபாளத்தின் காத்மாண்டு ஆகிய இடங்களிலும் இத்தகைய சுவர்கள் பேரழிவு விபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுவர் அகற்றப்படாவிட்டால், இலங்கையிலும் இவ்வாறான விமான விபத்துக்கள் ஏற்படக் கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு பரிந்துரைத்ததற்கமைய, வெளிப்படையான தாக்கத்தைத் தாங்கும் வேலியை அமைப்பது குறித்து பரிசீலிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version