Home விளையாட்டு புதிய ஹட்ரிக் சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர்

புதிய ஹட்ரிக் சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர்

0

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் (Pat Cummins) தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஹட்ரிக் (hat-trick) சாதனையை இரண்டாவது முறையாக படைத்துள்ளார்.

T20 உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு (Afghanistan) எதிரான இன்றைய (23.6.202) போட்டியிலேயே அவர் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

போட்டியில் தனது மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷித் கானை ஆட்டமிழக்கச் செய்த கம்மின்ஸ் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் கரீம் ஜனத் மற்றும் குல்பாடின் நைப் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் 

அண்மையில் பங்காளதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலும் பெட் கம்மின்ஸ் தொடர்ந்து 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 8 ஹட்ரிக் பதிவாகியுள்ள நிலையில், 2021 ஆம் ஆண்டு இலங்கைக்காக வனிந்து ஹசரங்க இந்த சாதனையை நிகழ்த்தினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலேயே அவர் இந்த ஹட்ரிக்கை பெற்றிருந்தார்.  

பிரட்லி (Brett Lee), கேம்பர், வனிந்து ஹசரங்க (W. Hasaranga), ரபாடா, கார்த்திக் மெய்யப்பன்,ஜோஸ் லிட்டில் ஆகியோரை தொடர்ந்து ரி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ஹெட்ரிக் எடுத்த பெருமையை அவுஸ்திரேலியாவின் (Australia) பட் கம்மின்ஸ் (Pat Cummins) பெற்றுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version